“சேமிக்கிறோம்… வாழ்கிறோமா?”

நிகழ்காலத்தில் வாழ்வது முடியாத ஒன்று அல்ல.. அதற்கு ஒரு விதமான தைரியம் வேண்டும்!

கடைசி காலம் எதுவென்று தெரியாமலேயே, கடைசி காலத்திற்காக உழைக்கிறோம்…

நாளை நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், இன்றைய நிம்மதியை பல நேரங்களில் தொலைத்து விடுகிறோம்.

எதிர்கால பாதுகாப்பிற்காக பணம் சேர்க்கிறோம்; ஆனால் அந்த பணத்தை அனுபவிக்க வேண்டிய நேரத்தை சேர்க்க மறந்து விடுகிறோம்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓடுகிறோம்; ஆனால் அவர்களுடன் வாழ வேண்டிய நிகழ்காலத்தைத் தவறவிடுகிறோம்.

“ஓய்வு பெற்ற பிறகு பயணம் செய்வோம்… நேரம் கிடைத்த பிறகு நம்மை கவனிப்போம்…” என்று வாழ்க்கையை தொடர்ந்து ஒத்திவைக்கிறோம்.

உளவியல் ரீதியாக, இந்த “பின்னர் வாழலாம்” என்ற எண்ணம் நிகழ்காலத்தின் மதிப்பை மெதுவாகக் குறைத்து விடுகிறது.

எதிர்காலத்தைத் திட்டமிடுவது அவசியம். ஆனால் எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தையே முழுமையாக இழப்பது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க முடியாது.

சேமிப்பு வேண்டும்; அதே நேரத்தில் அனுபவமும் வேண்டும்.
பொறுப்பு வேண்டும்; அதே நேரத்தில் மனதிற்கான ஓய்வும் வேண்டும்.
வெற்றி வேண்டும்; ஆனால் அந்த வெற்றியை அனுபவிக்க முடியாத அளவுக்கு நம்மை சோர்வடையச் செய்துவிடக் கூடாது.

நாம் வாழப்போகும் ஆண்டுகளின் எண்ணிக்கையைவிட, அந்த ஆண்டுகளில் எவ்வளவு வாழ்க்கையை உணர்ந்தோம் என்பதே முக்கியம்.

நேற்றை மாற்ற முடியாது. நாளையை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாது. நம்மிடம் உண்மையாக இருப்பது இந்தக் கணம் மட்டுமே.

அன்பை வெளிப்படுத்த வேண்டுமென்றால் நாளை வரை காத்திருக்க வேண்டியதில்லை.
நன்றி சொல்ல வேண்டுமென்றால் சரியான தருணத்தைத் தேட வேண்டியதில்லை.
சந்திக்க வேண்டியவர்களைச் சந்தியுங்கள். பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசுங்கள்.

எதிர்காலத்திற்காக உழையுங்கள்; ஆனால் நிகழ்காலத்தை அடமானம் வைக்காதீர்கள்.

கடைசி காலம் எப்போது தொடங்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் இன்று நம்மிடம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

எனவே, கடைசி காலத்திற்காக மட்டும் வாழாமல், கடைசி நாள் வந்தாலும்,

“நான் வாழ்ந்தேன்…”

என்று மனம் நிறைவுடன் சொல்லக்கூடிய வகையில் இன்றைய நாளையும் வாழ்வோம்.

நீங்கள் எதிர்காலத்திற்காக எதைச் சேமிக்கிறீர்கள்?
அதே நேரத்தில், இன்று எதற்காக வாழ்கிறீர்கள்?

சிந்தியுங்கள்.. சிந்தனை தெளிவுபடுத்தும்….


அன்புடன்,

ராகேஷ் பாபு | www.shreshtaminds.com

What If “Someday” Never Comes?

Living in the present is not impossible…It needs courage!

We work for a future we are not even sure we will reach.

Also, we tell ourselves, “One day, I will relax. I will travel one day. One day, I will spend more time with my family. One day, I will finally live the way I want.”

And in preparing for that “one day,” we quietly sacrifice today.

We:

— save money for the future, but sometimes forget to save time to enjoy what we have earned.

— work for our children’s future, yet miss the little moments of their childhood that can never return.

— postpone our dreams until retirement, without knowing what life, health, energy or circumstances will look like then.

From a psychological perspective, the habit of constantly saying “later” can make the present feel less valuable.

Planning for tomorrow is wisdom.

But sacrificing every today for an uncertain tomorrow is not necessarily wisdom.

We:

— need financial security, but we also need meaningful experiences.

— have responsibility, but we also need rest.

— need ambition, but we should not become so exhausted chasing success that we have no energy left to experience it.

— cannot change yesterday. We cannot completely control tomorrow.

All we truly have is this moment.

  • So express the love you feel.
  • Say the thank you.
  • Meet the people who matter.
  • Take that meaningful journey.
  • Create memories while you are still creating your future.

Work for tomorrow, but don’t mortgage today.

We don’t know when our “last phase” of life will begin.

But we do know that today is here.

So perhaps the goal is not merely to reach the end of life with everything accumulated…

but to reach it with the quiet satisfaction of being able to say:

“I didn’t just prepare for life.
I actually lived it.”

What are you saving for tomorrow—and what are you living for today?


In Love & Gratitude,

Rakesh Babu | Psychologist | www.shreshtaminds.com