சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வணக்கம்!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வணக்கம்!

ஆகஸ்டு 15, இந்தியர்களா இருக்குற எல்லாரும் சந்தோஷப்படுற நாள். எத்தனை காலம் அடிமை கோலம். நம்மளோட நாட்டு மன்னர்கள் ஏதோ ஒரு சூதுல மாட்டி நம்ம நாட்டை பறிகொடுத்தாங்க. வெளிநாட்டுலேருந்து வந்தவங்க அவங்களோட சுயரூபத்தை காட்டி நம்மள அவங்களோட அடிமையா மாத்தினாங்க.  அவங்களுக்கு வேணும்னு நினைச்ச எல்லா வணிகத்தையும் இங்கிருந்து அவங்க வசதிக்கு  செய்ய ஆரம்பிச்சாங்க…அமோக லாபம் (சந்தோஷம்) அவங்களுக்கும் கிடைச்சுச்சு. நம்மளோட மன்னர்களை கப்பம் கட்ட சொன்னாங்க. நம்மாளுங்களும் வேற வழியே இல்லாம சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டினாங்க.

ஒரு கட்டத்துல இளம் காளைகள் பல பேர் தங்களோட குரல் கொடுக்க ஆரம்பிச்சாங்க. எதிர்க்க தொடங்கினாங்க. போராட்டம் நடத்த ஆரம்பிச்சாங்க. இதனோட விளைவு பல பேர் கூட்டம் கூட்டமாக போராட்டத்துல ஈடுபட்டாங்க. நம்ம தமிழ் நாட்டுலேருந்து எத்தனையோ பேர் இன்னும் அவங்க பெயர் கூட நம்மளுக்கு தெரியாத அளவுக்கு எதிர்த்து நின்னு தங்களோட உயிரை பலிகொடுத்திருக்காங்க. இப்படி சுதந்திர போராட்டம் ஆரம்பிக்குது…வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் பலர் தென் திசையிலிருந்து குரல் கொடுத்து, அவங்களோட ரத்தத்தையும் உயிரையும் இந்த நாட்டுக்காக கொடுத்தாங்க. கிழக்கு, மேற்கு, வடக்குனு பாரதம் முழுவதும் சுதந்திர போராட்டம் நெருப்பா கொதிச்சுச்சு.

 

எப்படியெல்லாமோ ஒரு கட்டத்துல நம்ம நேதாஜி ஐயா ஒரு பாணியிலயும், மஹாத்மா காந்திஜி ஒரு பாணியிலயும் போராட ஆரம்பிச்சு, ஐயா பகத் சிங் போல பல பேரோட உயிர் தியாகத்துக்கு பிறகு ஆகஸ்டு 15, 1947 ல சுதந்திரம் வாங்கி கொடுத்தாங்க நம்ம நாட்டுக்கு. அத்தனை போராட்ட வீரர்களுக்கும் நம்மளோட மரியாதையை காணிக்கையா இங்க சமர்ப்பணம் பண்ணிக்குவோம். நாட்டிற்கு சுதந்திரம் கிடைச்சதுல பெருமை, சந்தோஷம், மனநிறைவு இப்படி நிறையா இருக்கு.

இனிமேல் தான் விஷயமே….நம்மளுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா? வாங்க பாக்கலாம்…

ஓகே..’நமக்கு’ சுதந்திரம் எப்போ அப்படினு ஒரு கேள்வியை கேப்போம்? நம்ம சுதந்திரமா இருக்கோமான்னு கேட்டா நம்மள்ல எத்தனை பேருக்கு பதில் தெரியும்னும் தெரியல. நம்ம மனசால சுதந்திரமா எப்போ எல்லா விஷயத்தையும் செய்ய முடியுதோ அப்போ தான் முழுமையான சுதந்திரம் நமக்கு கிடைச்சிருக்குனு அர்த்தம். மேல சொன்ன வெளிநாட்டுகாரங்க போலவே தான் வெளி மனிதர்கள் மற்றும் வெளி சூழலில் நம்ம மனசு மாட்டிக்கும். இப்போ சுதந்திரமா எதுவும் யோசிக்கவும், செய்யவும் முடியாம போயிருது. நம்மளோட சந்தோஷம் மத்தவங்கள சார்ந்து இருக்குது பல நேரங்கள்ல. இந்த சுதந்திரம் கிடைக்காம தான் மன அழுத்தம் அதிகம் ஆயிடுது. மனசும் உடம்பும் கெட்டுப்போக ஆரம்பிக்குது.

 

இங்க பல பேர் ஏதோ ஒரு விஷயத்துல தங்களோட சுதந்திரத்தை பறி கொடுத்துட்டு தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. இதனால் என்ன ஆகுது, மனசோட போராட வேண்டிய சூழ்நிலை ஆகுது. ஒரு கட்டத்துல, வாழ்க்கையை முடிச்சுக்கலாம்னு தோணிருது…பெயர், புகழ், பணம் உள்ளவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி…இந்த சூழ்நிலைல ஒரே மாதிரி தான் முடிவெடுக்குறாங்க. ஓரளவு போராடி, கடைசில மானம் போயிடும்னு பயந்து மனசுகிட்ட தோத்து போய் நிர்கதியா இந்த உலகத்தை விட்டே போயிடுறாங்க…ஒரு விதத்துல பாத்தா இவங்கல்லாம் கூட (சுய) சுதந்திரதிற்காக போராடுறவங்க தான். இதுல இன்னொரு பிரிவு இருக்கு, போராடி போராடி வாழ்க்கையை முடிச்சுக்கவும் தெரியாம (முடியாம) வெந்துகிட்டே இருப்பாங்க….இவங்கல்லாம் (சுய) சுதந்திர போராட்ட தியாகிகளே. 

 

மனச நல்லா புரிஞ்சு, அதை அமைதியா வச்சுக்கிட்டு, வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும்போது சுதந்திரமா இருக்கலாம். அன்னைக்கு தான் உண்மையான சுதந்திர தினம். இது தான் பாட்ஷா படத்துல ஆட்டோல ஓட்டிருந்தாங்க “உன் வாழ்க்கை உன் கையில்”னு. புரிஞ்சவன் பிஸ்தா… 

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் மற்றும் மன சுதந்திரத்திற்காக போராடியவர்கள், போராடுபவர்கள் & சுதந்திரம் அடைந்தவர்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பின் வாழ்த்துக்கள்.

 

சுதந்திரத்தோடு, ராகேஷ் எழுதுகிறார்….

R B

Website: http://rakeshbabu.com

Rakesh Babu - An Indian Psychologist | Behavioral Alchemist and a favorite Mentor for thousands of Students and youngsters for more than a decade. One of the TOP rated Psychologists who assess more Brains in a Year with most number of satisfied Clients. Inviting you all to experience the embarrassing life transforming sessions from a renowned Psychologist NOW!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *