சந்தோஷம் அன்லிமிட்டட்

சந்தோஷம் அன்லிமிட்டட்

அன்பு வாசகர்களுக்கு வணக்கம். 
 
ஆங்கிலத்தில் பல எழுதுகிறீர்கள், தமிழிலும் எழுதலாமே என்று நண்பர்கள் பலர் ஆலோசனை கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்டு இதோ இன்று தமிழிலும்…

 
ஆடி மாதம், அதி காலை வேளை….உறக்கம் சுகமாக கண்ணில் நிற்க அதை கலைக்க நான் முற்படவில்லை. கடமை கண் முன்னே நிற்கிறதே சரி எழுந்து தான் பார்ப்போம் என்று சோம்பல் முறித்து சிறு தியானம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை செய்த பின் கைகள் போனது அலைபேசி நோக்கி. முதல் வேலை அது தானே. அலாரம் நிறுத்திவிட்டு என் விரலுக்கு கட்டுப்படும் ஒன் ப்ளஸ் செவன் மொபைலை இயக்கினேன். அன்லிமிட்டட் இன்டர்நெட் இருப்பதால் மொபைல் டேட்டா ஆ ஃப் செய்யாமலே மறந்துபோய்    தூங்கிவிடுகிறேன் இந்நாளில்.
 
வாட்சாப் திறந்தால் நூற்றுக்கணக்கிற்கு மெசேஜஸ். சரி தட்டி தான் பார்ப்போம் என்று ஒவ்வொன்றாக ஓப்பன் செய்ய போகும்போது நான் பெரிதும் மதிக்கும் அன்பிற்கும், மரியாதைக்குமுரிய எனது வெற்றிக்கு பாதை வகுத்த, எனது வெற்றி பாதைகளில் கைகொட்டி மரமாக என்றென்றும் நிற்கும் எனது ஆசிரியையிடமிந்து ஒற்றை மெசேஜ் வந்திருந்தது…அதும் ஆடியோ மெசேஜ்…முற்றிலும்  ஆச்சர்யம் ஏனென்றால் அவரிடமிருந்து ஒரு மெசேஜ் வருவதே கடினம், அதும் காலை வேளையில் ஆடியோ வந்திருக்கே என்று ஆவலோடு ஓபன் செய்தேன். பல நிமிடங்கள் சுற்றோ சுற்று என்று சுற்றி விட்டு ஒரு வழியாக டவுன்லோட் ஆனது 1.5 மணி நேரத்திற்கு பிறகு. அங்கு அந்த குரல் பொழிந்த வார்த்தைகள் இதோ….    

முன்னேறு உன் இலக்கை நோக்கி

உன் நோக்கத்தையே தவமாய் மாற்று 
உன் குறிக்கோள்கள் உன் உணவாகட்டும் 
உன் கனவுகளே உன் சுவாசம் ஆகட்டும் 
நீ முன்னேறி செல்கையில்
பேரிடர்கள் வரலாம்  
பூகம்பம் வரலாம்
முட்புதர்கள் இருக்கலாம்..ஏன் 
முற்காடுகளே வரலாம்  
பாதை செங்குத்தாக கூட இருக்கலாம் 
ஆறறிவு ஜீவன்கள் உன் இலட்சியத்தை தின்ன காத்திருக்கும் 
ஆனால் நீ முன்னேறி ஓடு உன் இலக்கை நோக்கி 
எல்லாம் மாறி விடும் நீ சாதித்த பின்னர் 
முட்புதர் பூங்காவனமாய் மாறும் 
பூகம்பங்கள் பாராட்டு மழையாகும் 
வசை பாடிய வாய்கள் புகழ் பாடும் 
சாதனையாளனின் அனுபவ வாக்கு இது 
இடர்களை தாண்டு 
சமாளித்து ஓடு சவால்களை – ஆம் ஓடு ..
காலம் மெதுவாக நகரவில்லை இல்லை நடந்து செல்ல 
காலம் ஓடுகிறது …ஓடு நீ ஓயாது…
சூடு நீ வெற்றி வாகை!  
 
இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கு காலைல வந்தா எப்படி இருக்கும் அன்றைய நாள்? சொல்லவா வேணும்? சும்மா ஆயிரம் வால்ட் பல்பு எரிஞ்சுது பாக்கணுமே…ஒரு சிறிய அளவு கூட சோர்ந்து போகாமலிருக்க இப்படி சுற்றி நாலு பேர் இருந்தா போதுமே…இறைவனின் ஆசிகள் இப்படி தான் நம் அனைவருக்கும் வந்தடைகிறது. பிறந்த குழந்தையை பத்திரமாக காக்கும் அன்னையின் கைகளை போல் இந்த ஆசிகள்  நம்மை பாதுகாக்கும்.  
 
ராபின் சர்மா எழுதிய  ஒரு புத்தகம் தான் உடனே நினைவுக்கு வந்துச்சு…“யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்”  ஆங்கிலத்தில் ஹூ வில் க்ரை வென் யூ டை.
 
அதில் சாராம்சமே உடல் மரித்து போவதற்குள் மக்களை சம்பாதிச்சுக்கோ. மனிதம் உணர்ந்து மனிதநேயத்தோடு எல்லா உயிர்களிடத்தும் வேறுபாடில்லாமல் அன்பு பாராட்டி வாழ்ந்துவிடு.   
 
நல்ல உறவுகளை தேடிக்கொள் உன்னை நீ தேடி அலையும் இந்த வேளையில்.  கண்டிப்பாக சந்தோஷம் அன்லிமிட்டட்! 
 
அன்லிமிட்டட் சந்தோஷத்தோடு..ராகேஷ் எழுதுகிறார்…..

R B

Website: http://rakeshbabu.com

Rakesh Babu - An Indian Psychologist | Behavioral Alchemist and a favorite Mentor for thousands of Students and youngsters for more than a decade. One of the TOP rated Psychologists who assess more Brains in a Year with most number of satisfied Clients. Inviting you all to experience the embarrassing life transforming sessions from a renowned Psychologist NOW!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *